மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

2026-ம் ஆண்டு கரீஃப் பருவத்திற்கான பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது

प्रविष्टि तिथि: 08 APR 2026 4:18PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, 2026-ஆம் ஆண்டு கரீஃப் பருவத்திற்கான (01.04.2026 முதல் 30.09.2026 வரை) பாஸ்பேட், பொட்டாசியம் உரங்களுக்கான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய விகிதங்களை நிர்ணயிப்பது தொடர்பான, மத்திய உரத் துறையின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2026-ம் ஆண்டு காரிஃப் பருவத்திற்கான உத்தேச நிதி ஒதுக்கீடு சுமார் 41,533.81 கோடியாகும். இது இது 2025-ம் ஆண்டு கரீஃப் பருவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை விட சுமார் 4,317 கோடி அதிகமாகும். 2025-ம் ஆண்டு கரீஃப் பருவத்திற்கான நிதி ஒதுக்கீடு 37,216.15 கோடியாக இருந்தது.

பலன்கள்:

விவசாயிகளுக்கு மானிய விலையிலும், கட்டுப்படியான, நியாயமான விலையிலும் உரங்கள் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

செயல்படுத்தும் உத்தியும் இலக்குகளும்:

விவசாயிகளுக்கு இந்த உரங்கள் நியாயமான விலையில் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காக, டிஏபி உள்ளிட்ட பி & கே உரங்களுக்கான மானியம், 2026 கரீஃப் பருவத்துக்கு (01.04.2026 முதல் 30.09.2026 வரை பொருந்தும்) அங்கீகரிக்கப்பட்ட விலைகளின் அடிப்படையில் வழங்கப்படும்.

பின்னணி:

உர உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள் மூலம், அரசு டிஏபி உட்பட 28 உரங்களை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கி வருகிறது. பொட்டாசியம் உரங்களுக்கான மானியம், 01.04.2010 முதல் ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய திட்டத்தின் (NBS Scheme) கீழ் நிர்வகிக்கப்படுகிறது. விவசாயிகளுக்கு உகந்த அணுகுமுறைக்கு இணங்க, பாஸ்பேட், பொட்டாசியம் உரங்கள் விவசாயிகள் வாங்கக் கூடிய குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்ய அரசு உறுதிபூண்டுள்ளது.

யூரியா, டிஏபி, எம்ஓபி, சல்ஃபர் போன்ற உரங்கள், உள்ளீடுகளின் சர்வதேச விலைகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய போக்குகளைக் கருத்தில் கொண்டு, டிஏபி உள்ளிட்ட பாஸ்பேட், பொட்டாசியம் (பி&கே) உரங்களுக்கு, 2026 கரீஃப் பருவத்திற்கான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய திட்ட (NBS) விலைகளை 01.04.2026 முதல் 30.09.2026 வரை செயல்படுத்தும் வகையில் அங்கீகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகளுக்கு உரங்கள் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, அங்கீகரிக்கப்பட்ட விலைகளின்படி உர நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும்.

----

TV/PLM/SE


(रिलीज़ आईडी: 2268894) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Malayalam , Bengali , Bengali-TR , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu