பிரதமர் அலுவலகம்
உலக சுகதார தினத்தையொட்டி, ஆரோக்கியமான சமூகத்தை கட்டமைப்பதற்கான உறுதிப்பாட்டைப் பிரதமர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
07 APR 2026 9:33AM by PIB Chennai
உலக சுகாதார தினத்தையொட்டி, ஆரோக்கியமான பூமிக்காக பணியாற்றியதற்காகவும், அயராது சேவையாற்றி தங்களை அர்ப்பணித்த தனிநபர்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைப்பதற்கான தேசிய உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்திய திரு மோடி, ஆரோக்கியத்தை பராமரிக்கும் முறைகளை வலுப்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறும், அனைத்து தனிநபர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து குடிமக்களின் சிறந்த ஆரோக்கியத்திற்காக தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ள பிரதமர், தங்களுடைய சொந்த உடல்தகுதியை பராமரிப்பதற்கான அனைத்து சாத்தியமிக்க முயற்சிகளையும் கடைபிடிக்குமாறு ஊக்குவித்துள்ளார். உடற்பயிற்சியின் பயன்களை எடுத்துரைக்கும் சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:
“உலக சுகாதார தினத்தையொட்டி, ஆரோக்கியமான பூமிக்காக பணியாற்றியதற்காகவும், அயராது சேவையாற்றி தங்களை அர்ப்பணித்த தனிநபர்கள் அனைவருக்கும் நமது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டமைப்பதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் நாம் உறுதிப்படுத்துவோம். ஆரோக்கியத்தை பராமரிக்கும் சூழலை வலுப்படுத்துவதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு அனைத்து தனிநபர்களின் நலனுக்கும் முன்னுரிமை அளிப்போம்.”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2249522®=3&lang=2
***
SS/IR/RJ/SE
(रिलीज़ आईडी: 2268868)
आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam