மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
யுவ சங்கம் திட்டம்: உத்தரப் பிரதேச மாணவர்களுடன் அருணாச்சலப் பிரதேச ஆளுநர் கலந்துரையாடல்!
प्रविष्टि तिथि:
03 JUN 2026 6:30PM by PIB Chennai
யுவ சங்கம் ஆறாம் கட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக, உத்தரப் பிரதேச மாணவர் குழுவினர் அருணாச்சலப் பிரதேச ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) கைவல்யா திரு. விக்ரம் பர்நாயக்கை மக்கள் பவனில் சந்தித்துக் கலந்துரையாடினர். அப்போது தேசிய ஒருமைப்பாட்டை வளர்ப்பதில் இளைஞர்களின் பங்கு மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தின் கலாச்சாரம் குறித்து ஆளுநர் விளக்கினார்.
லக்னோ இந்திய மேலாண்மை நிறுவனத்தின் தலைமையிலான இந்த 38 மாணவர்கள் குழுவிற்கு, நஹர்லகுன் ரயில் நிலையத்தில் வடகிழக்கு மண்டல அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. இம்மாணவர்கள் அங்குள்ள கொம்பா பௌத்தக் கோயில், தோனி போலோ கேங்கிங் உள்ளிட்ட ஆன்மிக இடங்களைப் பார்வையிட்டதோடு, இந்திய மொழிகளின் மத்திய நிறுவனம் நடத்திய மொழியியல் பன்முகத்தன்மை குறித்த கலந்துரையாடலிலும் பங்கேற்று அருணாச்சலப் பிரதேசத்தின் கலாச்சாரப் பாரம்பரியத்தை அறிந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268614®=3&lang=1
செய்தி அடையாள எண்: 2268614
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2268690)
आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English