அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்ட அடுத்த தலைமுறைக்கான இந்தியா-தென்னாப்பிரிக்கா தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்கு டாக்டர் ஜிதேந்திர சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
प्रविष्टि तिथि:
03 JUN 2026 2:20PM by PIB Chennai
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில், இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என இந்தியா - தென்னாப்பிரிக்கா நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இருதரப்பு உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, மேம்பட்ட உற்பத்தி போன்ற அம்சங்களுக்கு உயர் முன்னுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத் துறை துணை அமைச்சர் டாக்டர் நோமலுங்கேலோ ஜினாவுடனான உயர்நிலைப் பிரதிநிதிகள் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள், ஆக்கபூர்வமாக இருந்தது என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்குமிடையேயான நட்புறவை, பாரம்பரிய ஆராய்ச்சி ஒத்துழைப்புடன், பொருளாதார, சமூக வளர்ச்சியில், உந்தப்பட்ட கூட்டாண்மைகளை நோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
தென்னாப்பிரிக்காவின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறை துணை அமைச்சர் டாக்டர் நோமலுங்கேலோ ஜினாவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்திய டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியா-தென்னாப்பிரிக்கா உறவின் அடுத்த கட்டம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், புத்தாக்கச் சூழல் அமைப்புகள், புத்தொழில் கூட்டாண்மைகள், தொழில்துறை சார்ந்த ஆராய்ச்சிகளால் வடிவமைக்கப்பட வேண்டும் என்று கூறினார். வளரும் நாடுகளுக்கு மலிவான, விரிவாக்கக்கூடிய அனைவரையும் உள்ளடக்கிய தொழில்நுட்பத் தீர்வுகளை உருவாக்குவதற்குத் தேவையான வலிமையைக் இரு நாடுகளும் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
பொது வரலாறு, ஜனநாயக விழுமியங்கள், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம், இந்தியா - தென்னாப்பிரிக்கா நாடுகள் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் இரு நடுகளும் பகிர்ந்து கொள்கின்றன என்று அமைச்சர் கூறினார். உலகின் தென் பகுதியில் உள்ள நாடுகளுக்கு ஆதரவாக, இரு நாடுகளும் பிரிக்ஸ், ஐபிஎஸ்ஏ, ஜி20, ஐஓஆர்ஏ போன்ற அமைப்புக்களின் மூலம் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் குறித்து சர்வதேச அளவில், பேச்சுவார்த்தைகளை வடிவமைப்பதில் பெரும் பங்களித்து வருகின்றன என்றும், அதே வேளையில், பல்வேறு உத்திசார்ந்த துறைகளில், இருதரப்பு ஒத்துழைப்பையும் மேம்படுத்துகின்றன என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268311®=3&lang=1
***
SS/SV/SH
(रिलीज़ आईडी: 2268609)
आगंतुक पटल : 9