குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
"அரசு - குடிமக்கள் இடையே நம்பிக்கையை வலுப்படுத்துவதன் மூலம், தணிக்கை நடைமுறைகள் ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துகிறது": குடியரசு துணைத் தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன்
प्रविष्टि तिथि:
03 JUN 2026 6:22PM by PIB Chennai
இந்தியாவின் முன்னாள் தலைமை தணிக்கை அதிகாரி திரு வினோத் ராய் தொகுத்த 'தணிக்கை நடைமுறைகள் முக்கியத்துவம் பெறும்போது: மாற்றத்தை உருவாக்கும் தலைமை தணிகை அதிகாரியின் செயல்பாடுகள்' என்ற புத்தகத்தை, குடியரசு துணைத் தலைவர் திரு சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்டார்.
குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற விழாவில் புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றிய அவர், தணிக்கை நடைமுறைகள் "ஜனநாயக அமைப்புக்களை வலுப்படுத்துவதற்கான முக்கிய கருவி" என்று கூறினார். மேலும், பொதுமக்கள் வரியாக செலுத்தும் பணம், சட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப, செயல்திறன், நேர்மையுடன் பொது நன்மைக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை குடிமக்களுக்கு உறுதி செய்கிறது என்றும் அவர் கூறினார். தணிக்கை நடைமுறைகள், அரசு அமைப்புகளை மேம்படுத்தவும், குறைபாடுகளைச் சரிசெய்யவும் உதவிடுவதுடன், அரசுக்கும், குடிமக்களுக்கும் இடையே நம்பிக்கையையும் வலுப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
பொது வாழ்வில் நெறிமுறைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த குடியரசு துணைத் தலைவர், நெறிமுறைகள், தணிக்கை ஆகியவை மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும், அது மேம்பட்ட பொதுச் சேவைகள், பொது வளங்களின் செயல்திறன் மிக்க பயன்பாடு, அதிக மீள்தன்மை, மேம்பட்ட பொது நம்பிக்கைக்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார். அறநெறி சார்ந்த நிர்வாகம், பொது நிர்வாகத்தின் தார்மீக அடித்தளமாக அமைய வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார். மேலும், நிர்வாக அமைப்புகள் பொது நலனுக்குச் சேவை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் வலியுறுத்தினார்.
கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம், நிதி மேற்பார்வை, பொறுப்புணர்வுக் கொள்கைகளை வகுத்துள்ள நிலையில், இந்திய இதிகாசங்கள், சாஸ்திரங்களில் பிரதிபலிக்கும் தர்மம், ராஜதர்மம், பொதுக் கடமை ஆகிய கோட்பாடுகளில், நாட்டின் பொறுப்புக்கூறல், அறநெறி சார்ந்த நிர்வாக மரபுகள் ஆழமாக வேரூன்றியுள்ளன என்று குடியரசு துணைத் தலைவர் திரு சி பி ராதாகிருஷ்னன் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2268547®=3&lang=1
(Release ID: 2268547)
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2268601)
आगंतुक पटल : 10