சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நீதிபதி மீனாட்சி மதன் ராய் நியமனம்
இடுகை இடப்பட்ட நாள்:
02 JUN 2026 7:03PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, சிக்கிம் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருக்கும் திருமதி. நீதிபதி மீனாட்சி மதன் ராய் அவர்களைப் பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
தற்போதைய தலைமை நீதிபதி திரு. சங்கம்குமார் சாஹூ 2026 ஜூன் 04 அன்று பணிநிறைவு பெறுவதைத் தொடர்ந்து, நீதிபதி மீனாட்சி மதன் ராய் 2026 ஜூன் 05 முதல் பாட்னா உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்பார்.
(ஜகந்நாத் சீனிவாசன்)
இந்திய அரசின் இணைச் செயலாளர்
தொலைபேசி: 2338 3037
Release ID: 2268096
****
TV/EA/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2268188)
வருகையாளர் எண்ணிக்கை : 8