பிரதமர் அலுவலகம்
கர்மயோகி சாதனா வாரத்தில் பிரதமர் உரையாற்றினார்
प्रविष्टि तिथि:
02 APR 2026 11:52AM by PIB Chennai
திறன் மேம்பாட்டுக் குழுவின் (சிபிசி) நிறுவன தினத்தை முன்னிட்டு, காணொலிச் செய்தி மூலம் கர்மயோகி சாதனா வார விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.
இன்றைய பொது சேவையின் வழிகாட்டும் தத்துவத்தை விரிவாக விளக்கிய பிரதமர், குடிமக்களை உயர்ந்தவர்களாகக் கருதும் 'நாகரிக தேவோ பவ' (குடிமக்களே தெய்வம்) என்பதே நிர்வாகத்தை இயக்கும் தாரக மந்திரம் என்று குறிப்பிட்டார். பொதுச் சேவை, குடிமக்களிடம் அதிகத் திறனுடனும் அதிக உணர்வுடனும் செயல்படும் வகையில் மறுசீரமைக்கப்பட்டு வருவதாக அவர் வலியுறுத்தினார். "மக்கள் பணியை உண்மையாகவே குடிமக்களை மையமாகக் கொண்டதாக மாற்றுவதன் மூலம், அதற்கு இப்போது ஒரு புதிய அடையாளம் வழங்கப்படுகிறது," என்று பிரதமர் குறிப்பிட்டார்.
குடிமக்களுக்கு எளிதான வாழ்க்கையை ஏற்படுத்தவும், அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் ஆளுகையே அளவுகோலாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய பிரதமர், அரசு ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டு, ஒரு கர்மயோகியின் உண்மையான உணர்விற்கு ஏற்ப தங்களை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். "குடிமக்களின் வாழ்க்கைத் தரம் நாளுக்கு நாள் மேம்படுவதை நமது நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும், இதுவே நமது உண்மையான அளவுகோல்," என்று திரு மோடி திட்டவட்டமாகக் கூறினார்.
சாமானிய குடிமக்களுக்கு உள்ளாட்சி அலுவலகமே ஒட்டுமொத்த அரசின் முகமாக விளங்குகிறது என்பதை பிரதமர் அரசு ஊழியர்களுக்கு நினைவூட்டினார். அதிகாரிகளின் பணியும் நடத்தையும், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு நிறுவனங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை நேரடியாக வடிவமைக்கின்றன என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். "நாம் எந்த மட்டத்தில், என்ன செய்தாலும், அந்த நம்பிக்கையை நாம் பாதுகாக்க வேண்டும்; அதுவே நமது ஜனநாயகத்தின் அடித்தளம்," என்று திரு மோடி கூறினார். இந்தியா ஒரு வளர்ச்சியடைந்த பாரதமாக மாறுவதற்கான பயணத்தில் கர்மயோகி சாதனா வாரம் ஒரு முக்கிய அத்தியாயமாக அமையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2248167®=3&lang=2
***
TV/BR/SE
(रिलीज़ आईडी: 2268076)
आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
Odia
,
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam