பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஸ்ரீமத் சுதீந்திர தீர்த்த சுவாமிஜிக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 31 MAR 2026 10:58AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஸ்ரீமத் சுதீந்திர தீர்த்த சுவாமிஜியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். ஸ்ரீமத் சுதீந்திர தீர்த்த சுவாமிஜி, சேவைக்கும் ஆன்மீகத்திற்கும் தன்னை அர்ப்பணித்து, சமூகத்தில் நிலையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். மதிப்பிற்குரிய சுவாமிஜி எண்ணற்ற நிறுவனங்களையும் ஆராய்ச்சி மையங்களையும் நிறுவியதோடு, மக்களிடையே கல்வியைப் பரப்புவதில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டாம் என்பதையும் பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி மடம் சமஸ்தானத்தைச் சேர்ந்த ஸ்ரீமத் சுதீந்திர தீர்த்த சுவாமிஜியின் நூற்றாண்டு விழாச் சிறப்பு நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவர் தமது வாழ்நாளை சேவைக்கும் ஆன்மீகத்திற்கும் அர்ப்பணித்தார். அவர் எண்ணற்ற நிறுவனங்களையும், ஆராய்ச்சி மையங்களையும் நிறுவியதோடு, மக்களிடையே கல்வியைப் பரப்புவதில் பேரார்வம் கொண்டிருந்தார். அவரது போதனைகள் எளிமை, கருணை, நீதி ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. நமது மண்ணில் தோன்றிய இந்திய கலாச்சாரத்தையும், அதன் விழுமியங்களையும் பாதுகாத்து, பிரபலப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டத்தக்கவை."

***

(Release ID: 2247167)

TV/PLM


(வெளியீட்டு அடையாள எண்: 2267943) வருகையாளர் எண்ணிக்கை : 13