பிரதமர் அலுவலகம்
ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
30 MAR 2026 9:50AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (30.03.2026), பாரதத் தாயின் வீரமகன் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். தனது புரட்சிகரமான சிந்தனைகளால், அவர் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார் என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். அவரது வாழ்க்கையும் லட்சியங்களும் நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினரையும் தேசிய சேவையை நோக்கி தொடர்ந்து ஊக்குவிக்கும் என்றும் திரு நரேந்திர கூறியுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"பாரத அன்னையின் வீர புதல்வன் ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் நினைவு நாளில் அவருக்குப் பணிவான அஞ்சலிகள். தமது புரட்சிகரமான சிந்தனைகளால், அவர் சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவரது வாழ்வும் லட்சியங்களும் தேசத்திற்குச் சேவை செய்ய ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்."
***
(Release ID: 2246733)
TV/PLM/KR
(रिलीज़ आईडी: 2267931)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam