பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நேபாள பிரதமராகப் பதவியேற்றுள்ள திரு பலேந்திர ஷா-வுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

प्रविष्टि तिथि: 27 MAR 2026 7:59PM by PIB Chennai

நேபாளத்தின் பிரதமராகப் பதவியேற்றுள்ள திரு பலேந்திர ஷா-வுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளா.  பலேந்திர ஷா நேபாளப் பிரதமராகப் பதவியேற்று இருப்பது, நேபாள மக்கள் அவரது தலைமை மீது வைத்துள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையிலான நட்பும் ஒத்துழைப்பும் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லப்படும் என்றும், திரு பலேந்திர ஷா-வின் பதவிக் காலம் இரு நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்கு உகந்ததாக அமையும் என்றும் தாம் உறுதியாக நம்புவதாக திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"நேபாளத்தின் பிரதமராகப் பதவியேற்றுள்ள பாலேந்திர ஷா-வுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!

உங்களது பதவியேற்பானது, உங்கள் தலைமை மீது நேபாள மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. நாம் ஒன்றிணைந்து, இந்திய-நேபாள நட்புறவையும் ஒத்துழைப்பையும் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்வோம். இந்தப் பதவியேற்பு இரு நாட்டு மக்களின் பரஸ்பர நலனுக்கு உகந்ததாக அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்."

***

(Release ID: 2246274)

TV/PLM/KR


(रिलीज़ आईडी: 2267913) आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam