பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மேற்கு ஆசிய நிலவரம் குறித்து அமெரிக்க அதிபருடன் பிரதமர் தொலைபேசி வாயிலாகப் பேச்சு

प्रविष्टि तिथि: 24 MAR 2026 8:48PM by PIB Chennai

அமெரிக்க அதிபர் திரு டொனால்ட் ஜே. ட்ரம்பிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பை ஏற்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருடன் உரையாடினார்.

மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழல் குறித்து இரு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பதற்றத்தைத் தணிப்பதையும், கூடிய விரைவில் அமைதியை மீட்டெடுப்பதையும் இந்தியா ஆதரிக்கிறது என்று பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

ஹார்முஸ் நீரிணை திறந்த, பாதுகாப்பான மற்றும் அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் பொருளாதார நல்வாழ்வுக்கு அது இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டார்.

பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தற்போதைய முயற்சிகள் குறித்து தொடர்பில் இருக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இந்த உரையாடல் தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் குறிப்பிட்டதாவது:

அதிபர் திரு டிரம்ப் அவர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பைப் பெற்றேன். மேற்கு ஆசியாவின் சூழல் குறித்து பயனுள்ள கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டோம். பதற்றத்தைத் தணிப்பதையும், கூடிய விரைவில் அமைதியை மீட்டெடுப்பதையும் இந்தியா ஆதரிக்கிறது. ஹார்முஸ் நீரிணை திறந்த, பாதுகாப்பான, அணுகக்கூடியதாக இருப்பதை உறுதி செய்வது முழு உலகிற்கும் இன்றியமையாதது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான முயற்சிகள் குறித்து தொடர்பில் இருக்க நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

@realDonaldTrump

@POTUS”

***

(Release ID: 2244731)

TV/RB/KR


(रिलीज़ आईडी: 2267826) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Khasi , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam