பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி டிவி9 நெட்வொர்க் உச்சிமாநாட்டில் உரையாற்றினார்
இந்தியா ஒரு புதிய நம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது; இப்போது இந்தியா, சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்கிறது: பிரதமர்
புதிய இந்தியா, வளர்ச்சிக்கான எந்த வாய்ப்பையும் விட்டு விடாமல் முன்னேறி வருகிறது : பிரதமர்
प्रविष्टि तिथि:
23 MAR 2026 9:28PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி 'இந்தியாவும் உலகமும்' என்ற கருப்பொருளில் நடைபெற்ற டிவி9 ஊடக மாநாட்டில் உரையாற்றினார். முன்னெப்போதும் இல்லாத, கடுமையான உலகளாவிய சூழ்நிலைகள் நிலவுவதைக் குறிப்பிட்ட பிரதமர், ஒரு இக்கட்டான காலகட்டத்தில் கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு முக்கிய தளத்தை உருவாக்கியதற்காக டிவி9 நெட்வொர்க் ஊடக நிறுவனத்தைப் பாராட்டினார். இப்போது உலகம் கடந்து செல்லும் கடுமையான சூழ்நிலைகள் முன்னெப்போதும் இல்லாதவை, மிகவும் தீவிரமானவை என்று அவர் தெரிவித்தார்.
மோதல்கள் நிறைந்த உலகில் இந்தியாவின் நிலை குறித்துப் பேசிய பிரதமர், 2014-ம் ஆண்டுக்கு முந்தைய நிலைகளைக் கடந்து, புது நம்பிக்கையுடன் முன்னேறி, இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக கூறினார். கொவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு சவால்கள் அதிகரித்து வந்தபோதிலும், 140 கோடி மக்கள் ஒன்றுபட்டு நின்றதால், இந்தியா ஒவ்வொரு இடர்பாட்டையும் கடந்து செல்ல முடிந்தது என்று அவர் குறிப்பிட்டார். பிப்ரவரி 28 முதல் இந்த 23 நாட்களில், இந்தியா, பிற நாடுகளுடனான தனது உறவுகளை கையாளும் திறன், முடிவெடுக்கும் திறன், நெருக்கடிகளை நிர்வகிக்கும் திறன் ஆகியவற்றைச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளது என்று திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.
வளைகுடா நாடுகள் முதல் மேற்கத்திய நாடுகள் வரையிலும், தெற்கு நாடுகள் முதல் அண்டை நாடுகள் வரையிலும் இந்தியா முன்னெப்போதும் இல்லாத இணைப்புகளை ஏற்படுத்தி, அனைவருக்கும் நம்பகமான நட்பு நாடாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது என்று அவர் கூறினார்.
உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டிருக்கும் இக்காலகட்டத்தில், இந்தியாவின் பன்முகப்படுத்தல், மீள்திறன் மாதிரியை எடுத்துரைத்த பிரதமர், எரிசக்தி, உரங்கள் அல்லது அத்தியாவசியப் பொருட்கள் என எதுவாக இருந்தாலும், மக்களின் சிரமங்களைக் குறைக்க தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். மேற்கு ஆசிய மோதலால் இந்திய எதிர்கொள்ளும் நிலைமை குறித்துப் பேசிய பிரதமர், போர்கள் புவியியல் ரீதியாக இந்தியாவின் எல்லைகளிலிருந்து தொலைவில் இருந்தாலும், இன்றைய இணைக்கப்பட்ட உலகில் எந்த நாடும் அவற்றின் பாதகமான விளைவுகளிலிருந்து தனித்து இருக்க முடியாது என்று குறிப்பிட்டார். இது நிதானத்துடனும் உணர்வுப்பூர்வமாகவும் இருக்க வேண்டிய நேரம் எனவும் ஒரு நெருக்கடியை எதிர்கொள்ள நாட்டு மக்கள் ஒன்றுபடும்போது, அதன் பலன்கள் எப்போதும் அர்த்தமுள்ளதாகவே இருக்கும் என்றும் திரு நரேந்திர மோடி கூறினார்.
உலகளாவிய சிக்கல்களுக்கு மத்தியிலும் இந்தியாவின் வளர்ச்சி வேகம் தடையின்றித் தொடர்கிறது என்று பிரதமர் எடுத்துரைத்தார். இப்போது இந்தியா அதிவேக வளர்ச்சிப் பாதையில் உள்ளது எனவும், தீர்மானங்கள் சாதனைகளாக மாறி வருகின்றன என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
தற்போது நடைபெற்று வரும் மாற்றங்களை பிரதமர் எடுத்துரைத்தார். ஒரு காலத்தில் துப்பாக்கிச் சத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அசாம், தற்போது ஒரு செமி கண்டக்டர் ஆலையின் இருப்பிடமாக மாறியுள்ளது என்று கூறினார். செமி கண்டக்டர் முதல் பெட்ரோலிய வேதிப்பொருட்கள் வரையிலான துறைகளில் ஒடிஷா வளர்ச்சியை கண்டு வருகிறது என்று அவர் தெரவித்தார். உத்தரப் பிரதேசம் கைபேசி உற்பத்திக்கான உலகளாவிய மையமாக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
தியாகி பகத் சிங், தியாகி ராஜகுரு, தியாகி சுக்தேவ் ஆகியோர் தங்கள் உயிரைத் தியாகம் செய்த நாளான தியாகிகள் தினம், டாக்டர் ராம் மனோகர் லோகியாவின் பிறந்தநாள் ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இது என்று பிரதமர் கூறினார். தமது உரையை நிறைவு செய்த பிரதமர் திரு நரேந்திர மோடி, சுயநலத்தை விட தேசத்திற்கு எப்போதும் முன்னுரிமை அளித்த இந்த மாபெரும் ஆளுமைகளிடமிருந்து உத்வேகம் பெற வேண்டும் என்று கூறினார். தேசிய நலனுக்கு முன்னுரிமை அளிக்கும்போது, இந்தியா வளர்ச்சியடைந்த, தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றும் என்று கூறி தமது உரையை நிறைவு பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவு செய்தார்.
***
(Release ID: 2244211)
TV/PLM
(रिलीज़ आईडी: 2267821)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Bengali
,
Odia
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam