உள்துறை அமைச்சகம்
குஜராத் மாநிலம் காந்திநகரில் ரூ.340 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 MAY 2026 6:58PM by PIB Chennai
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று குஜராத்தின் காந்திநகரில் உள்ள கலோல் மற்றும் காந்திநகர் (வடக்கு) சட்டமன்றத் தொகுதிகளில் ரூ340 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். மேலும், ஒரு தொடக்கப் பள்ளியையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சுதந்திரப் போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் பிறந்தநாளை முன்னிட்டு திரு அமித் ஷா அவருக்கு மரியாதை செலுத்தியதுடன், வீர் சாவர்க்கர் ஒரு மகத்தான தேசபக்தராகத் திகழ்ந்தபோதும், எதிர்க்கட்சிகள் தலைமையிலான அரசுகள் அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்குவதை அவசியமாகக் கருதவே இல்லை என்றும் கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், ஊடுருவல் மூலம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள், தாங்கள் வந்த இடங்களுக்கே திரும்பிச் செல்ல வேண்டும் என அரசு விரும்புவதாகக் கூறினார். ஊடுருவல்காரர்களை அடையாளம் காணும் நடவடிக்கை தொடங்குவதற்கு முன்பே, அவர்கள் தாங்களாகவே திரும்பிச் சென்றுவிடுவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் அடையாளம் கண்டு நாட்டிலிருந்து வெளியேற்றுவதில் அரசு உறுதியாக உள்ளது என்று திரு அமித் ஷா கூறினார். இதனால்தான் பிரதமர் திரு நரேந்திர மோடி, மக்கள்தொகை மாற்றம் குறித்து ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்தார் என்றும் அவர் கூறினார். நாடு முழுவதும் நடைபெறும் செயற்கையான மக்கள்தொகை மாற்றங்கள், அவற்றுக்கான காரணங்கள், அவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்தக் குழு ஒரு விரிவான ஆய்வை மேற்கொள்ளும் என்று திரு அமித் ஷா தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266356®=3&lang=1
***
SS/BR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2267808)
வருகையாளர் எண்ணிக்கை : 20