பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முப்படைத் தலைமைத் தளபதியாக ஜெனரல் என் எஸ் ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு

प्रविष्टि तिथि: 31 MAY 2026 9:51PM by PIB Chennai

நாட்டின்  மூன்றாவது முப்படைத் தலைமைத் தளபதியாகவும் , ராணுவ விவகாரங்கள் துறையின் செயலாளராகவும் ஜெனரல் என் எஸ் ராஜா சுப்பிரமணி 2026 மே 31 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். முன்னதாக, தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அவருக்கு, முப்படை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றுவதே தனது முதன்மை நோக்கம் என்று அவர் கூறினார். முப்படைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு, கூட்டுச் செயல்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதுடன், தற்சார்பு இந்தியா  இலக்கை அடைய உள்நாட்டுத் தயாரிப்பு ஆயுதங்களை அதிகரிப்பதில் கவனம் செலுத்துவது குறித்து வலியுறுத்தினார்.

கடந்த நான்கு தசாப்தங்களாகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர்,  1985 டிசம்பரில் கர்வால் ரைஃபிள்ஸ் பிரிவில் இணைந்தார். மத்திய கட்டுப்பாட்டு தளபதி, ராணுவ துணைத் தளபதி போன்ற பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த அவர், முப்படைத் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்பதற்கு முன்பு தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267339&reg=3&lang=1

 

***

SS/VK/KR


(रिलीज़ आईडी: 2267606) आगंतुक पटल : 26
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी