பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பழங்குடியின மாணவர்களுடன் குடியரசுத் தலைவர் சிறப்பு கலந்துரையாடல்

இடுகை இடப்பட்ட நாள்: 01 JUN 2026 11:19AM by PIB Chennai

பழங்குடியினர் பெருமிதத் திருவிழாவின் ஒரு பகுதியாக, மத்திய பழங்குடியினர் நல்வாழ்வு அமைச்சகம், குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பழங்குடியின மாணவர்களுடன் கலந்துரையாடும் ஒரு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

பகவான் பிர்சா முண்டாவின் நினைவாக 2026 மே 25 முதல் ஜூன் 2 வரை நடைபெறும் வார விழாவின் ஒரு நிகழ்வாக இது அமைகிறது.

நாடு முழுவதிலுமிருந்து அமைச்சகத்தின் கல்வி உதவித்தொகைத் திட்டங்களைப் பெறும் சுமார் 200 பழங்குடியின மாணவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கின்றனர். உயர்கல்வி மற்றும் ஆய்வுகளில் சிறந்து விளங்கும் இம்மாணவர்கள், ‘வளர்ச்சியடைநத் இந்தியா 2047’ இலக்கை அடைவதில் அரசின் கல்விசார் அக்கறையை உலகிற்கு உணர்த்துவார்கள்.

இந்த மாணவர்கள் தேசிய பழங்குடியின ஆய்வு உதவித்தொகை, உயர்கல்விக்கான தேசிய உதவித்தொகை, வெளிநாட்டு கல்வி உதவித்தொகை ஆகிய திட்டங்களின் கீழ் பயனாளிகள் ஆவர். இத்திட்டங்கள் முறையே இந்தியாவின் முனைவர், பட்டப்படிப்புகள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் பழங்குடியின மாணவர்களுக்கு முழுமையான நிதி ஆதரவை வழங்குகின்றன.

 இந்தச் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வானது, பழங்குடியின மாணவர்கள் கல்வித் தரம், தலைமைப்பண்பு, புத்தாக்கச் சிந்தனைகளில் சிறந்து விளங்க ஊக்கமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், பழங்குடியினரின் சமூக, கல்வி அதிகாரமளித்தலில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை இந்த நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267361&reg=3&lang=1

 

***

SS/VK/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2267460) வருகையாளர் எண்ணிக்கை : 29
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , Gujarati , Kannada , हिन्दी , Bengali-TR , Bengali , Malayalam , English