தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-கட்டம் III

प्रविष्टि तिथि: 31 MAY 2026 3:08PM by PIB Chennai

இந்திய தேர்தல் ஆணையம், இந்திய அரசியலமைப்பின் 324 வது பிரிவின் கீழ் அதன் அதிகாரங்களைப் பயன்படுத்தி, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் பொருந்தக்கூடிய பிற விதிகளுடன், 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில்  சிறப்பு தீவிர திருத்தம் (எஸ். . ஆர்) மேற்கொள்ள மே 14,2026 அன்று உத்தரவிட்டது.

சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ். . ஆர்) முக்கிய நோக்கம்-தகுதி வாய்ந்த குடிமக்கள் யாரும் விடுபடக்கூடாது என்பதுடன்அதே நேரத்தில் தகுதியற்ற நபர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதாகும்இந்திய குடிமகனாக இருக்கும் ஒவ்வொரு நபரும், தகுதி தேதியில் பதினெட்டு வயதிற்கு குறையாதவர் மற்றும் எந்தவொரு சட்டத்தின் கீழும் தகுதி நீக்கம் செய்யப்படாதவர் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய உரிமை உண்டு.

 இந்திய தேர்தல் ஆணையத்தின் 14.05.2026 தேதியிட்ட உத்தரவின் படி, ஒடிசா, மிஸோராம், சிக்கிம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கான கணக்கீட்டு கட்டம் 30.05.2026 அன்று தொடங்கியது. 28.06.2026 அன்று அல்லது அதற்கு முன்னர் தேர்தல் பதிவு அதிகாரியால்  கணக்கீட்டு படிவங்கள் பெறப்பட்ட அனைத்து தகுதியான வாக்காளர்களும் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

28.06.2026 க்குள் தங்கள் கணக்கீட்டு படிவங்களை சமர்ப்பிக்க முடியாத வாக்காளர்கள் உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட அறிவிப்பு படிவத்துடன் படிவம் 6 மூலம் விண்ணப்பிக்கலாம்.

 அரசியல் கட்சிகளின் அதிக ஈடுபாட்டை உறுதி செய்யும் நோக்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள்  (பி. எல். ) பொதுமக்களிடமிருந்து ஒரு நாளைக்கு 50 படிவங்கள் வரை சேகரித்து வரைவு வெளியீட்டிற்கு முன் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்க ஆணையம் அனுமதித்துள்ளது. தேசிய மற்றும் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் எஸ். . ஆர் செயல்முறையை சுமூகமாகவும் திறம்படவும் நடத்துவதில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உதவ கூடுதல் வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கலாம். தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களும் எஸ். . ஆர் செயல்முறையில் பங்கேற்கவும், வீடு வீடாக வருகை தரும் போது தேர்தல் அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2267217&reg=3&lang=1  

***

TV/PKV/RJ


(रिलीज़ आईडी: 2267325) आगंतुक पटल : 23
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati