பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஏஐ-யால் இயக்கப்படும் குரல் 'செயலியை அறிமுகப்படுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 30 MAY 2026 4:37PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை, (தனிப்பொறுப்பு),  பிரதமர் அலுவலகம், அணுசக்தி, விண்வெளிபணியாளர், பொது மக்கள் குறைதீர்வு  மற்றும் ஓய்வூதியத் துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இன்று ஏஐ-யால் இயக்கப்பட்ட சிபிகிராம்ஸ் குரல் "சட்பாட்"- அறிமுகப்படுத்தினார். புதுதில்லியில் உள்ள கடமை பவனில், பஹாஸினி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுப் புகார்கள் துறையால்  உருவாக்கப்பட்டது இந்த  "சமாதான் டிடி".

இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், மக்களுக்கு பொதுச் சேவைகளைப் பயன்படுத்துவதில் எளிமையை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், சிபிகிராம்ஸ் ஏஐ-இயக்கப்பட்ட இந்த மாற்றத்தை "பொதுப் புகார் தீர்க்கும் முறையின் ஜனநாயகமயமாக்கல்" என்று குறிப்பிட்டார். பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையின் கீழ் நிர்வாக சீர்திருத்தங்களின் மையமாக மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை இருந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொது நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தின் மாற்றும் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டிய அமைச்சர், செயற்கை நுண்ணறிவு குறைதீர்வை ஜனநாயகப்படுத்துவதை முன்னெடுத்துச் செல்வதாகவும்அதை மேலும் அணுகக்கூடியதாகவும், பதிலளிக்கும் வகையிலும், திறமையானதாகவும் மாற்றுவதாகவும்மேலும், ஏஐ-இயக்கப்பட்ட கருவிகள் மக்கள் ஈடுபாட்டை வலுப்படுத்தி, குறைதீர்வின் தரம் மற்றும் வேகத்தை மேம்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266985&reg=3&lang=1

***

TV/PKV/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2267104) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati