சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
தேசிய பல்லுயிர் ஆணையம் 2025-26 நிதியாண்டில் அணுகல் மற்றும் பயன்கள் பகிர்வு முறையின் மூலம் ரூ 21.26 கோடி ஈட்டியது
இடுகை இடப்பட்ட நாள்:
30 MAY 2026 1:03PM by PIB Chennai
தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் 2025-26-ம் நிதியாண்டில் அணுகல் மற்றும் நன்மை பகிர்வு முறையின் கீழ் ரூ. 21.26 கோடியை ஈட்டியுள்ளது. ஆராய்ச்சி, வணிக பயன்பாடு, அறிவுசார் சொத்துரிமை, உயிரியல் ஆய்வு மற்றும் உயிரியல் வளங்களின் உயிரியல் பயன்பாடு ஆகியவற்றிற்காக வழங்கப்பட்ட ஒப்புதல்களிலிருந்து இந்தத் தொகை பெறப்பட்டது. இது இந்தியாவின் பல்லுயிர் நிர்வாக கட்டமைப்பில் வளர்ந்து வரும் தொழில்துறை பங்கேற்பைப் பிரதிபலிக்கிறது.
இந்தக் காலகட்டத்தில், விதைத் துறை மிகப்பெரிய பங்களிப்பாளராக உருவெடுத்தது, இது ரூ. 11.75 கோடியும், ஆயுஷ் துறை ரூ. 5.56 கோடியும் ஈட்டியுள்ளன.
மக்காச்சோளம், அரிசி, மஞ்சள், கடுகு, சுரைக்காய், ஏலக்காய், துளசி, வேம்பு இலைகள், அஸ்வகந்தா, மிளகு, இலவங்கம் உள்ளிட்ட சுமார் 300 உயிரியல் வளங்களை இந்தத் துறைகள் பயன்படுத்தின.
இன்றுவரை, தேசிய பல்லுயிர் ஆணையம் இந்த நிதியை ரூ. 266 கோடி உயிரியல் வளங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவற்றை பயன்படுத்துபவர்களிடமிருந்து ஈட்டியுள்ளது. இதில், ரூ. 145 கோடி ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266923®=3&lang=1
***
TV/PKV/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2267030)
வருகையாளர் எண்ணிக்கை : 14