நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா - வியட்நாம் இடையே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை ஒப்பந்தம்: ரிசர்வ் வங்கி மற்றும் வியட்நாம் அரசு வங்கி கையெழுத்து

प्रविष्टि तिथि: 29 MAY 2026 6:34PM by PIB Chennai

நிதி மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கியும்  வியட்நாம் அரசு வங்கியும்  கடந்த மே 5-ம் தேதி ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே கியூஆர்  குறியீடு அடிப்படையிலான எல்லை கடந்த வணிகப் பரிவர்த்தனைகளை எளிதாக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தகவல்களைப் பரிமாறிக்கொள்வது, டிஜிட்டல் கட்டண முறைக்கான தரநிலைகளை உருவாக்குவது மற்றும் நிதி சார்ந்த தொழில்நுட்பங்களில் இணைந்து செயல்படுவது இதன் நோக்கமாகும்.

இந்த முயற்சி இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதோடு, வெளிப்படையான, உடனடி மற்றும் குறைந்த கட்டணத்திலான பணப் பரிவர்த்தனைகளை உறுதி செய்யும். இந்தியாவின் நிதி தொழிலநுட்ப வளர்ச்சியை உலக அரங்கில் மேலும் வலுப்படுத்த இந்த ஒப்பந்தம் உதவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266736&reg=3&lang=1

***

TV/VK/RJ


(रिलीज़ आईडी: 2266922) आगंतुक पटल : 47
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Malayalam