புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பனிமூட்டமில்லா வான்பயணம்: தில்லி விமான நிலையத்தில் இந்தியாவின் முதல் 'ஸ்கைகாஸ்ட்' அமைப்பைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் ஜிதேந்திர சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 29 MAY 2026 4:56PM by PIB Chennai

இந்தியாவின் வான்வெளிப் போக்குவரத்தில் புதிய சகாப்தத்தைப் படைக்கும் வகையில், தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் நாட்டின் முதல் 'ஸ்கைகாஸ்ட்' அமைப்பை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. ஜிதேந்திர சிங் இன்று தொடங்கி வைத்தார். உலகளவில் இத்தகைய மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட 19வது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

'மிஷன் மௌசம்' திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த ஸ்கைகாஸ்ட் அமைப்பு, பனிமூட்டம் மற்றும் மோசமான வானிலை குறித்து மூன்று மணி நேரத்திற்கு முன்பே விமானிகளுக்கும் வான்வெளி கட்டுப்பாட்டாளர்களுக்கும் துல்லியமான தகவல்களை வழங்கும். இதன் மூலம் விமானங்கள் திசைமாற்றப்படுவதும், ரத்து செய்யப்படுவதும் பெருமளவு குறைக்கப்படும். ரேடார் விண்ட் புரொபைலர், லைடார் சீலோமீட்டர் மற்றும் ஏரோசல் ஸ்பெக்ட்ரோமீட்டர் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், தரையிறக்கம் மற்றும் புறப்படுதல் மிகவும் பாதுகாப்பானதாக அமையும்.

தில்லியைத் தொடர்ந்து ஜெவார் விமான நிலையத்திலும், பின்னர் நாட்டின் பிற முக்கிய விமான நிலையங்களிலும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும். இது வான்பயணப் பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், நகர வானிலை முன்னறிவிப்பு மற்றும் மாசு மேலாண்மைக்கும் பெரிதும் உதவும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266638&reg=3&lang=1


***

TV/VK/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2266876) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Telugu