பாதுகாப்பு அமைச்சகம்
ஆபரேஷன் சிந்தூரில் வீரர்களின் தனிப்பட்ட அனுபவங்களை விவரிக்கும் நூல் - பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட்டார்
இடுகை இடப்பட்ட நாள்:
29 MAY 2026 2:19PM by PIB Chennai
பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், இன்று (மே 29, 2026), 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்த நூல் தொகுப்பை வெளியிட்டார். இந்த நடவடிக்கையில் பங்கேற்ற 100 அதிகாரிகள், கடற்படையினர், விமானப்படையினர், பிற வீரர்களின் தனிப்பட்ட அனுபவங்களை இது ஆவணப்படுத்துகிறது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளில் ஈடுபட்ட வீரர்களுக்கு இந்த நூல் மரியாதை செலுத்துகிறது என்றும் இது நமது, வீரர்களின் அர்ப்பணிப்பு, மனவுறுதி ஆகியவற்றை வெளிப்படுத்துவதாகவும் சமூக ஊடக தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மக்கள் இந்தப் புத்தகத்திலிருந்து உத்வேகம் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுதில்லியில், நடைபெற்ற இந்த நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் முப்படைகளின் தளபதி, ஜெனரல் அனில் சௌஹான், கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி, ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, விமானப் படைத் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ பி சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266570®=3&lang=1
***
SS/PLM/PD/SE
(வெளியீட்டு அடையாள எண்: 2266760)
வருகையாளர் எண்ணிக்கை : 13