இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப் பொருளுக்கு எதிராக ஒரு மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க இணை அமைச்சர் ரக்ஷா கட்சே அழைப்பு விடுத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 28 MAY 2026 3:26PM by PIB Chennai

மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில், இளைஞர் நலன் துறையின் கீழ் செயல்படும் ‘மை பாரத்’ அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட “வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள் – வடகிழக்கு” என்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் ரக்ஷா கட்சே, இளைஞர்களிடையே அதிகரித்து வரும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் என்ற சவாலை எதிர்த்து, ஒரு கூட்டு மற்றும் ‘இயக்க ரீதியிலான’ அணுகுமுறை தேவை என்று அழைப்பு விடுத்தார்.

வடகிழக்கு பிராந்தியம் முழுவதும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு மற்றும் இளைஞர் ஈடுபாட்டு முயற்சிகளை வலுப்படுத்துவதற்கான உத்திகள் குறித்து விவாதிக்க, 24 ஆன்மீக மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர் நல அதிகாரிகள், சிவில் சமூகப் பங்குதாரர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் இளைஞர் விவகாரத் துறையின் செயலாளர் பல்லவி ஜெயின் கோவில், ‘மை பாரத்’ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி  டாக்டர் பிரியங்கா சுக்லா, ஐஐஎம் ஷில்லாங் இயக்குனர் நளினி பிரவா திரிபாதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய திருமதி ரக்ஷா கட்சே, இளைஞர் சக்தி நாட்டின் மிகப்பெரிய பலமாக உள்ளது என்று குறிப்பிட்டார்; மேலும், 2047-ம் ஆண்டிற்குள் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்குவதற்கு, இளைஞர்களைச் சரியான திசையில் வழிநடத்துவது மிகவும் முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266222&reg=3&lang=1

***

TV/SV/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2266389) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी