பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கிராமப்புறங்களில், பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ‘நிர்பய் ரஹோ’ முன்முயற்சியின் கீழ் பயிற்றுநர்களுக்கான பயிற்சித் திட்டத்தை நடத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 28 MAY 2026 11:32AM by PIB Chennai

“வன்முறையிலிருந்து விடுதலை: பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான சட்ட விதிகள் குறித்து தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் திறனை வளர்த்தல்” என்ற தலைப்பிலான மூன்று நாள் பயிற்றுநர்களுக்கான பயிற்சித் திட்டம், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் 2026 மே 25 முதல் 27 வரை புதுதில்லியில் நடைபெற்றது. இத்திட்டம், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், பெங்களூருவில் உள்ள தேசிய சட்டப்  பல்கலைக்கழகத்துடன் இணைந்து, நிர்பயா நிதியின் மூலம் செயல்படுத்தப்படும் ‘நிர்பய் ரஹோ’ முன்முயற்சியின் கீழ் நடத்தப்பட்டது. பெண்களின் பாதுகாப்பு, சட்ட விழிப்புணர்வு, பாலின உணர்திறன், வழிமுறைகள், சமூக அளவிலான ஆதரவு அமைப்புகள் தொடர்பான விஷயங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் மற்றும் பஞ்சாயத்து பிரதிநிதிகளின் திறன்களை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள், தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தின் கீழ் இயங்கும் பஞ்சாயத்து ராஜ் சிறப்புப் பள்ளி, பிரமல் அறக்கட்டளை மற்றும் டிரான்ஸ்ஃபார்ம் ரூரல் இந்தியா அறக்கட்டளை ஆகியவற்றின் பிரதிநிதிகள் உட்பட 50 பங்கேற்பாளர்கள் இந்த பயிற்சியில் கலந்துகொண்டனர். இதில், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் பரத்வாஜ், இந்திய பொது நிர்வாக அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் சுரேந்திரகுமார் பாக்டே ஆகியோர் உரையாற்றினர்.

அடிப்படை அளவில் விழிப்புணர்வு, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நீதிக்கான நடைமுறைகளை வலுப்படுத்துவதில் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் முக்கியப் பங்களிப்பை திரு விவேக் பரத்வாஜ் எடுத்துரைத்தார். பெண்களின் பாதுகாப்பு, கண்ணியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில், குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்க முடியும் என்றும், அதே நேரத்தில் கிராமப்புறங்களில், சமூக ஆதரவு அமைப்புகளையும் நிறுவன வழிமுறைகளையும் வலுப்படுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266135&reg=3&lang=1

***

TV/SV/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2266243) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati