பாதுகாப்பு அமைச்சகம்
சூர்யகிரண் விமான சாகசக் குழு, துல்லியம், ஆர்வம், தொழில்முறைச் சிறப்பின் 30 ஆண்டுகள் நிறைவைக் கொண்டாடியது
இடுகை இடப்பட்ட நாள்:
28 MAY 2026 10:17AM by PIB Chennai
இந்திய விமானப்படையின் புகழ்பெற்ற விமான சாகசக் குழுவான சூர்யகிரண் விமான சாகசக் குழு, தனது 30-வது ஆண்டு விழாவை 2026 மே 26 அன்று பீதர் விமானப்படைத் தளத்தில் கொண்டாடியது. இந்த நிகழ்ச்சியில், துல்லியமான விமான சாகசங்கள், விமானியின் மிகச்சிறந்த செயல்திறன் ஆகியவற்றின் மூலம், நாட்டிற்கு உத்வேகம் அளித்த புகழ்பெற்ற முப்பது ஆண்டுகள் நிறைவை நினைவுகூர்ந்தது.
இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சியில், விமானப்படைத் தலைமைத் தளபதி, ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங், பயிற்சிப் பிரிவின் தலைமைத் தளபதி, ஏர் மார்ஷல் எஸ். ஸ்ரீனிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, விமானப்படைத் தலைமைத் தளபதியும், பயிற்சிப் பிரிவின் தலைமைத் தளபதியும் விமான சாகசக் காட்சியின் போது, விமானிகள் குழுவுடன் இணைந்து பறந்தனர்.
சூர்யகிரண் விமான சாகசக் குழு, தனது புகழ்பெற்ற சாகச நிகழ்ச்சியின் போது உயிரிழந்த துணிச்சலான உறுப்பினர்களின் நினைவாக, "ஹாலோ டைமண்ட்" என்ற அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அஞ்சலி, உயிரிழந்த விமானிகளின் அடையாளங்களான ஆழ்ந்த நட்பு, துணிச்சல், வலுவான மனவுறுதியைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது.
சூர்யகிரண் விமான சாகசக் குழு1996-ல் பீதரில் உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து 800-க்கும் மேற்பட்ட விமான சாகசக் காட்சிகள் மூலம் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள லட்சக்கணக்காண மக்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. இது இந்திய விமானப்படையின் பெருமை, துல்லியம், தொழில்முறை சார்ந்த செயல்திறனுக்கு அடையாளமாகத் திகழ்கிறது. அதன் அடையாளச் சின்னமான சிவப்பு-வெள்ளை வண்ணத்தில் ஹாக் எம்கே-132 விமானத்தை இயக்கி, எப்போதும் சிறந்தது என்ற குறிக்கோளை நிலைநிறுத்தி, தலைமுறைகளுக்குத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2266121®=3&lang=1
***
TV/SV/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2266214)
வருகையாளர் எண்ணிக்கை : 11