பிரதமர் அலுவலகம்
வீர் சாவர்க்கரின் பிறந்த தினத்தில், அவரை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
28 MAY 2026 9:52AM by PIB Chennai
வீர் சாவர்க்கரின் பிறந்த தினத்தையொட்டி இன்று அவரை நினைவுகூர்ந்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, அவரது துணிச்சல், தேசபக்தி, சமூக சீர்திருத்தத்திற்கான பங்களிப்பிற்கு மரியாதை செலுத்தினார்.
மாபெரும் புரட்சியாளரும், தலைசிறந்த தேசிய சிந்தனையாளருமான அவர், துணிச்சல், புத்திகூர்மை, தேசபக்தி போன்ற உணர்வின் மூலம், நாட்டின் ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில், பிரதமர் ஒரு சமஸ்கிருத சுபாஷிதத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்:
இந்த உலகில், பலர் தங்களது புத்தி கூர்மை அல்லது வலிமைக்காக அறியப்படுகிறார்கள். ஆனால், அறிவுக்கூர்மை, வீரம் ஆகிய இரண்டு அம்சங்களையும் ஒன்றாகக் கொண்ட, அமைதியான, மகத்தான ஆளுமைகள் கொண்டவர்கள் மிகவும் அரிதாகவே உள்ளனர்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“வீர் சாவர்க்கரின் பிறந்த தினத்தில், அவரை நினைவு கூர்கிறேன். அவரது துணிச்சலும், தேசபக்தியும், மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும். அவரது புத்தி கூர்மையும், சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு அவர் அளித்த முக்கியத்துவம் போற்றுதலுக்குரியவை.”
(Release ID: 2266117)
***
TV/SV/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2266167)
வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam