அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மத்திய அரசின் அறிவியல், புதுமை கண்டுபிடிப்புத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்த மத்திய அரசும் மேற்குவங்க அரசும் முடிவு செய்துள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
26 MAY 2026 5:13PM by PIB Chennai
மத்திய அரசின் அறிவியல், புதுமை கண்டுபிடிப்புத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்த மத்திய அரசும் மேற்குவங்க அரசும் முடிவு செய்துள்ளன.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், மேற்கு வங்க முதலமைச்சர் திரு சுவேந்து அதிகாரியுடன் கொல்கத்தாவில் ஆலோசனை நடத்தினார். அப்போது அம்மாநிலத்தில் அறிவியல், ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்பு, புத்தொழில் சார்ந்த அனைத்து முக்கிய மத்திய அரசுத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்துவதென முடிவு செய்யப்பட்டது.
மேற்கு வங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அறிவியல் நிறுவனங்களின் இயக்குநர்கள், பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். அம்மாநிலத்தில் அறிவியல் ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்பு, உயிரித் தொழில்நுட்பம், மருத்துவ ஆய்வுகள், புத்தொழில் மேம்பாடு, அறிவியல் கல்வி விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265474®=3&lang=1
***
TV/IR/KPG/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2265646)
வருகையாளர் எண்ணிக்கை : 8