ஆயுஷ்
azadi ka amrit mahotsav

உலகப் பாரம்பரியச் சின்னமான கஜுராஹோ, 2026 சர்வதேச யோகா தினத்திற்கான 25 நாள் முன்னோட்ட நிகழ்வை நடத்தத் தயார் நிலையில் உள்ளது

प्रविष्टि तिथि: 26 MAY 2026 4:33PM by PIB Chennai

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம், யோகா மகோத்சவம் 2026 - சர்வதேச யோகா தினத்திற்கான 25 நாள் முன்னோட்ட நிகழ்வை, மத்தியப் பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டம், கஜுராஹோவில் நாளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

முன்னதாக, இன்று கஜுராஹோவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ஆயுஷ், சுகாதாரம், குடும்ப நலத்துறை இணையமைச்சர்
திரு பிரதாப்ராவ் ஜாதவ், "யோகா மகோத்சவம்–2026" நிகழ்ச்சி, 2026-ம் ஆண்டு கொண்டாடப்படவுள்ள 12-வது சர்வதேச யோகா தினத்திற்கான நாடு தழுவிய நிகழ்ச்சிகளில், ஒரு முக்கிய மைல்கல்லாகத் திகழ்வதாகவும், நாடு முழுவதும் யோகாவை விரிவுபடுத்துவதில் மத்திய அரசு கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டை இது பிரதிபலிப்பதாகவும் உள்ளது என்று தெரிவித்தார். 2026 சர்வதேச யோகா தினத்திற்கு முன்னதாக, யோகா குறித்த விழிப்புணர்வை வலுப்படுத்தவும், பொதுமக்களின் பங்கேற்பை ஊக்குவிக்கவும், மத்திய ஆயுஷ் அமைச்சகம், நாடு முழுவதும் 100 இடங்களில் அமைந்துள்ள, 100 நிறுவனங்களுடன் இணைந்து, 100 நாள் முன்னோடி விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

கஜுராஹோ மக்களவைத் தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விஷ்ணு தத் சர்மா, ராஜநகர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் திரு. அரவிந்த் படேரியா ஆகியோரும் செய்தியாளர் சந்திப்பின் போது உடனிருந்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2265432&reg=3&lang=1

***

SS/SV/RJ


(रिलीज़ आईडी: 2265603) आगंतुक पटल : 64
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu , Kannada , Malayalam