மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்திய வணிகப் பள்ளியுடன் இணைந்து மொஹாலியில் நிர்வாக உச்சி மாநாடு 2026-ஐ நடத்தியது
प्रविष्टि तिथि:
25 MAY 2026 10:34AM by PIB Chennai
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பாரதி பொதுக் கொள்கை நிறுவனத்துடன் இணைந்து மொஹாலியில் உள்ள இந்திய வணிகப் பள்ளியில் 2026 மே 23 அன்று நிர்வாக உச்சி மாநாடு 2026-ஐ நடத்தியது.
இந்தியாவின் வளர்ச்சியடைந்த இந்தியா தொலைநோக்கு பார்வையின் கீழ், மின்னணு வர்த்தகம், பாதுகாப்பு, சுகாதார நலன், நிர்வாகம் ஆகியவற்றுக்கான மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகள் குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு விளக்கும் வகையில் இந்த ஒரு நாள் உச்சி மாநாடு நடைபெற்றது.
மின்னணு வர்த்தகத்தில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு, மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான இணையவழி பாதுகாப்பு, சுகாதார நலன் அணுகல், வேலைவாய்ப்பு உருவாக்கம், மின்னணு தொழில் முனைவு ஆகியவை குறித்து இந்த உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264873®=3&lang=1
***
SS/IR/LDN/PD
(रिलीज़ आईडी: 2264939)
आगंतुक पटल : 54