கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மும்பை ஜேஎன்பிஏ துறைமுக நெரிசலைக் குறைக்க அரசு அதிரடி நடவடிக்கை

प्रविष्टि तिथि: 22 MAY 2026 8:21PM by PIB Chennai

சரக்கு பெட்டக நிலையங்களில்  நிலவும் டிரெய்லர் ஓட்டுநர்கள் பற்றாக்குறையால் ஏற்பட்ட விநியோகச் சங்கிலித் தடையைச் சரிசெய்து, வணிகத்தை எளிதாக்க மத்திய அரசு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் முடங்கிய 25,000 கன்டெய்னர்களை விரைவாக வெளியேற்ற மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் சர்பானந்த சோனாவால் ஆகியோர் உயர்மட்ட ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து, மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் ரயில் மூலம் சரக்கு பெட்டகங்களை விரைந்து அனுப்பியதுடன், ஒரே நேரத்தில் இரண்டு பெட்டகங்களை ஸ்கேன் செய்யும் முறையையும் அறிமுகப்படுத்தியது. மேலும், ரயில் மூலம் டெர்மினல்களுக்கு இடையே சரக்கு கையாள்வதற்கான கட்டணங்கள் மற்றும் தரை வாடகைக் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. காலி லாரிகளுக்கு தனிப் பசுமைப் பாதைகள்  அமைக்கப்பட்டன. நீண்ட காலத் தீர்வாக, ஓட்டுநர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளுடன் இணைவது மற்றும் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவது போன்ற திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2264338&reg=3&lang=1

***

TV/PKV/RJ


(रिलीज़ आईडी: 2264668) आगंतुक पटल : 48
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Kannada