இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு தழுவிய காமன்வெல்த் விளையாட்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும்: மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

प्रविष्टि तिथि: 21 MAY 2026 5:17PM by PIB Chennai

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நாடு தழுவிய காமன்வெல்த் விளையாட்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்

காமன்வெல்த் விளையாட்டு இயக்கத்தை நாடு தழுவிய அளவில் முன்னெடுத்துச் செல்ல ஆயுஷ்மான் குரானா மற்றும் புகழ்பெற்ற விளையாட்டு நட்சத்திரங்கள் தீபங்களை ஏந்திச் செல்வர்.

உடற்தகுதி மற்றும் விளையாட்டுப் போட்டியின் அடையாளப்பூர்வமான நாடு தழுவிய மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றாக, 'சைக்கிள் இந்தியா' வழங்கும் 'ஃபிட் இந்தியா ஞாயிறு' நிகழ்ச்சியின் 75-வது சிறப்புப் பதிப்பு, மே 24 அன்று நடைபெறவுள்ளது.

இது நாடு முழுவதும் 8,000-க்கும் மேற்பட்ட இடங்களில் மக்களை ஒன்றிணைக்கும்.

காமன்வெல்த் விளையாட்டு தினத்தைக் கொண்டாடும் வகையில், இந்தியாவின் விளையாட்டு எதிர்காலத்திற்கும், அகமதாபாத்தில் நடைபெறவிருக்கும் 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கும் மரியாதை செலுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

2030-ம் ஆண்டில், வரலாற்றுச் சிறப்புமிக்க நூற்றாண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நகரமான அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆற்றங்கரைப் பகுதியில் இருந்து, மத்திய இளையோர்  விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில் இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், அவருடன் குஜராத் துணை முதலமைச்சர் திரு ஹர்ஷ் சங்கவியும் பங்கேற்கிறார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263785&reg=3&lang=1

***

TV/SV/SE


(रिलीज़ आईडी: 2263913) आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Kannada , Malayalam