சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் மனிதர்களிடம் மேற்கொள்ளப்படும் முதல்கட்ட மருத்துவப் பரிசோதனையை வலுப்படுத்த ஐசிஎம்ஆர் அறிக்கை வெளியிட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 21 MAY 2026 11:35AM by PIB Chennai

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (ஐசிஎம்ஆர்) முதலாவது ஐசிஎம்ஆர் ஆண்டு மருத்துவப் பரிசோதனைத் திட்டம் 2026-ஐ 2026Nk மே 20 அன்று வெற்றிகரமாக நடத்தியது.

இந்த தேசிய அளவிலான நிகழ்வு நாட்டின் மருத்துவப் பரிசோதனை சூழலை வலுப்படுத்துவது, சான்றுகள் அடிப்படையிலான ஒருங்கிணைந்த மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்துவது குறித்து உரையாடல்களுக்கு ஒரு முக்கிய தளமாக அமைந்தது.

இக்கூட்டம் மருத்துவ ஆராய்ச்சியில் உருவாகும் வாய்ப்புகள், நெறிமுறைக் கட்டமைப்புகள், ஒழுங்குமுறை வழிமுறைகள், புதுமைக் கண்டுபிடிப்புகள் குறித்து விவாதிப்பதற்காக கொள்கை வகுப்பாளர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை ஒருங்கிணைத்தது. 

இந்நிகழ்வில் இந்தியாவில் மனிதர்களிடம் மேற்கொள்ளப்படும் முதல்கட்ட மருத்துவப் பரிசோதனையை வலுப்படுத்துவதற்கான  ஐசிஎம்ஆர் அறிக்கை வெளியிடப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263574&reg=3&lang=1

***

SS/IR/KPG/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2263764) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati