கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மின்சாரப் பேருந்துகள் மற்றும் லாரிகள் பயன்பாட்டைத் துரிதப்படுத்த மத்திய அமைச்சர் திரு.ஹெச்.டி. குமாரசாமி தலைமையில் உயர்மட்டக் கூட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 20 MAY 2026 6:10PM by PIB Chennai

இந்தியாவின் தூய்மை எரிசக்தி போக்குவரத்து மாற்றத்தை வேகப்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் மின்சாரப் பேருந்துகள் மற்றும் மின்சார லாரிகளின் பயன்பாட்டை அதிகரிப்பது குறித்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மத்திய கனரக தொழில்கள் மற்றும் எஃகு துறை அமைச்சர் திரு. ஹெச்.டி. குமாரசாமி தலைமை தாங்கினார்.

 

இக்கூட்டத்தில் மின்சார வாகனப் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள், நிதி நிறுவனங்கள், வாகன குத்தகை நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்துத் துறைத் தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். மின்சாரப் பேருந்துகள் மற்றும் மின்சார லாரிகளின் பயன்பாட்டை விரைவுபடுத்துவதில் உள்ள நடைமுறை எதார்த்தங்களைப் புரிந்துகொள்வதும், அரசு மற்றும் தனியார் துறையினரிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும். மத்திய கனரக தொழில்கள் அமைச்சகத்தின் செயலாளர் கம்ரான் ரிஸ்வி, கூடுதல் செயலாளர் டாக்டர் ஹனிப் குரேஷி ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

 

கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் திரு.ஹெச்.டி. குமாரசாமி, இந்தியாவில் பயணிகள் போக்குவரத்தின் எதிர்காலத் தூணாக மின்சாரப் பேருந்துகள் விளங்கும் என்றும், நிலையான சரக்கு போக்குவரத்தின் எதிர்காலத்தை மின்சார லாரிகள் மாற்றியமைக்கும் என்றும் குறிப்பிட்டார். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையின்படி, இந்த மின்சார வாகனப் புரட்சி சுற்றுச்சூழலுக்கு மட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரத்திற்கும் முக்கியமானது என்றும், இதற்கான கொள்கைகளை வகுக்க அடிமட்டத்தில் இயங்கும் நிறுவனங்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263345&reg=3&lang=1

செய்தி அடையாள எண்: 2263345

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2263480) வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , English , Urdu , Marathi , Telugu , Kannada