ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரத் டெக்ஸ் 2026 மொபைல் செயலியை ஜவுளித்துறை செயலாளர் திருமிகு நீலம் ஷமி ராவ் தொடங்கிவைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 MAY 2026 2:25PM by PIB Chennai

இந்தியாவின் மிகப்பெரிய உலகளாவிய ஜவுளி நிகழ்வில், வாங்குவோர், சர்வதேச பிரதிநிதிகள், கூட்டாளர்கள், கண்காட்சியாளர்கள், வருகையாளர்கள் ஆகியோரின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமான பாரத் டெக்ஸ் 2026 நிகழ்வு செயலியை ஜவுளித்துறை செயலாளர் திருமிகு நீலம் ஷமி ராவ் இன்று (20.05.206) தொடங்கிவைத்தார்.

இந்த அதிகாரப்பூர்வ பாரத் டெக்ஸ் 2026 செயலி டிஜிட்டல் சார்ந்த அணுகுமுறையைக் கடைபிடிக்கிறது. மேலும் இது பங்கேற்பாளர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதிலும் தரவு சார்ந்த தகவல்களை செயல்படுத்துவதிலும் பாரத் டெக்ஸ் 2026-ல் முக்கியப் பங்கு வகிக்கும்.

இந்தச் செயலி பதிவு செய்த பங்கேற்பாளர்கள் நிகழ்வு தரவுகளைத் தெரிந்து கொள்ளவும், கண்காட்சியாளர்களைக் கண்டறியவும், கூட்டங்களைத் திட்டமிடவும் புதிய வாடிக்கையாளர்களை கண்டறியவும் உதவுகிறது. இது அனைத்தையும் ஒரே மொபைல் வழியாக மேற்கொள்ள முடியும். இந்தச் செயலி கண்காட்சியாளர்கள், பேச்சாளர்கள், சர்வதேச பிரதிநிதிகள், வெளிநாட்டைச் சேர்ந்த வாங்குவோர், உள்நாட்டைச் சேர்ந்த மொத்த கொள்முதல் செய்வோர், கொள்முதல் ஆலோசகர்கள், பொதுப் பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்டதாகும். 

பாரத் டெக்ஸ் செயலிக்கான இணைப்பை https://onelink.to/zcrm4s.  என்ற இணையதளத்தின் மூலம் பெறலாம்.  பாரத் டெக்ஸ் 2026 புதுதில்லி பாரத் மண்டபத்தில் ஜூலை 14 முதல் 17 வரை நடைபெறவுள்ளது. இதில் 7,000-க்கும் மேற்பட்ட சர்வதேச வாங்குவோர் 1,30,000-க்கும் மேற்பட்ட வர்த்தகப் பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263168&reg=3&lang=1

***

SS/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2263408) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada , Malayalam