வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026, ஏப்ரல் மாதத்திற்கான எட்டு முக்கியத் தொழில்களின் குறியீடு (அடிப்படை ஆண்டு: 2011-12=100). வெளியிடப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 20 MAY 2026 5:00PM by PIB Chennai

எட்டு முக்கியத் தொழில்களின் ஒருங்கிணைந்த குறியீடு, ஏப்ரல் 2025-குறியீட்டுடன் ஒப்பிடும்போது, ஏப்ரல் 2026-ல் 1.7 சதவீதம் (தற்காலிகம்) அதிகரித்துள்ளது. சிமெண்ட், எஃகு மற்றும் மின்சார உற்பத்தி ஏப்ரல் 2026-ல் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

தொழில்துறை உற்பத்திக் குறியீடு (ஐசிஐ) என்பது நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புப் பொருட்கள், உரங்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய எட்டு முக்கியத் தொழில்களின் உற்பத்தியில் ஒருங்கிணைந்த மற்றும் தனிப்பட்ட செயல்திறனை அளவிடுகிறது. இந்த எட்டு முக்கியத் தொழில்கள், தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் (IIP) சேர்க்கப்பட்டுள்ள கூறுகளின் அளவில் 40.27 சதவீதத்தைக் கொண்டுள்ளன.

மார்ச் 2026-க்கான எட்டு முக்கியத் தொழில்கள் குறியீட்டின் இறுதி வளர்ச்சி விகிதம் 1.2 சதவீதமாகக் காணப்பட்டது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2025-26 ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் ஐசிஐ-யின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் 2.7 சதவீதமாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2263287&reg=3&lang=2

****

TV/SMB/SH


(रिलीज़ आईडी: 2263404) आगंतुक पटल : 44
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Kannada