பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மலேசிய பிரதமருடன் பிரதமர் பேசினார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 MAR 2026 4:52PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி மலேசிய பிரதமர் திரு அன்வர் இப்ராஹிம்முடன் உரையாடி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டு மேற்காசிய பிராந்திய விவகாரங்கள் குறித்து பேசினார்.

மலேசியப் பிரதமர் திரு அன்வர் இப்ராஹிம்முடன் பேசிய பிரதமர், எதிர்வரும் ஹரி ராயா ஐடில்பித்ரி பண்டிகையையொட்டி, மலேசிய மக்களுக்கும் அவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்த விவாதத்தின்  போது, மேற்காசியாவில் நிலவும் கவலைக்குரிய சூழ்நிலைக் குறித்து இருதலைவர்களும் உரையாடி, மோதலைத் தவிர்ப்பதற்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்தனர். பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜீய முறை மூலம் விரைவில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் மீண்டும் ஏற்படுத்துவதன் அவசியம் குறித்து திரு மோடியும், பிரதமர் திரு இப்ராஹிம்மும் வலியுறுத்தினார்கள்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் எழுதியிருப்பதாவது:

எனது நண்பரும் மலேசியப் பிரதமருமான திரு அன்வர் இப்ராஹிமுடன் உரையாடி, எதிர்வரும் ஹரி ராயா ஐடில்ஃபித்ரி பண்டிகையையொட்டி, அவருக்கும் மலேசிய மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

மேற்கு ஆசியாவில் நிலவும் மிகுந்த கவலைக்குரிய சூழல் குறித்தும் நாங்கள் விவாதித்ததோடு, பேச்சுவார்த்தை மற்றும் ராஜ்ஜிய முறை மூலம் மோதலைத் தவிர்ப்பதற்கும், அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் விரைவில் ஏற்படுத்துவதற்கும் எங்களது பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினோம்.” 

***

(Release ID: 2242536)

SS/IR/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2263199) வருகையாளர் எண்ணிக்கை : 2