பிரதமர் அலுவலகம்
நவ சம்வத்ஸர் எனும் சிறப்புமிக்க நன்னாளில் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAR 2026 8:03AM by PIB Chennai
நவ சம்வத்ஸர் எனும் மங்களகரமான நாளில், நாட்டு மக்களுக்குப் பிரதமர் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். வளம் நிறைந்ததாகவும், நாட்டின் முன்னேற்றத்திற்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புடன் கூடியதாகவும் இந்த ஆண்டு அமைய வேண்டும் என்று அவர் வாழ்த்தியுள்ளார்.
நவ சம்வத்ஸர் எனும் மிகவும் சிறப்பான இந்தத் தருணத்தில் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், வரவிருக்கும் இந்தப் புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் துணிவு, தன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை ஆகியவற்றை வலுப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று பிரார்த்தித்தார். இந்த அம்சங்கள் நாட்டைக் கட்டமைப்பதற்கான கூட்டு முயற்சிகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த திரு. மோடி, அனைத்துக் குடிமக்களுக்கும் பெரும் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் சிறந்த ஆரோக்கியம் அமையட்டும் என்று வாழ்த்தினார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
'நவ சம்வத்ஸர்' எனும் மிகச் சிறப்பான நன்னாளையொட்டி, அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சி, வெற்றி மற்றும் சிறந்த ஆரோக்கியம் அமையட்டும். எதிர்வரும் இந்தப் புத்தாண்டு, அனைவரின் வாழ்விலும் துணிவு, தன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை ஆகியவற்றை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். மேலும், நாட்டைக் கட்டமைப்பதற்கான நமது கூட்டு முயற்சிகளுக்கு இது ஒரு புதிய உத்வேகத்தையும் அளிக்கட்டும்.
---
(Release ID: 2242246)
TV/IR/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2263193)
வருகையாளர் எண்ணிக்கை : 2
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam