பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குவைத் பட்டத்து இளவரசருடன் பிரதமர் உரையாடினார்

प्रविष्टि तिथि: 18 MAR 2026 6:18PM by PIB Chennai

குவைத் பட்டத்து இளவரசரான ஷேக் சபா அல்-காலத் அல்-ஹமாத் அல்-முபாரக் அல்-சபாவுடன் பிரதமர் தொலைபேசியில் உரையாடினார். அப்போது பண்டிகைக்கால வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டதுடன், பிராந்தியப் பாதுகாப்பு தொடர்பான நிகழ்வுகள் குறித்து விவாதித்தனர்.

பிரதமர், குவைத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்-காலேத் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபாவுடன் தொலைபேசியில் உரையாடி, எதிர்வரும் ஈத் பண்டிகையையொட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த உரையாடலின் போது, திரு மோடியும், பட்டத்து இளவரசரும் மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் சூழல் குறித்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதுடன், சமீபத்திய நிகழ்வுகள் குறித்த கவலைகளையும் பகிர்ந்து கொண்டனர். குவைத்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதல்களை இந்தியா கண்டிப்பதை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். மேலும், ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதே முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு தொடர்ச்சியான ராஜ்ய ரீதியிலான ஈடுபாடு இன்றியமையாதது என்பதை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். குவைத்தில் உள்ள இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்காக தொடர்ந்து வழங்கப்படும் ஆதரவிற்காக பிரதமர் பட்டத்து இளவரசருக்கு நன்றி தெரிவித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

"குவைத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்-காலேத் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபாவுடன் தொலைபேசியில் உரையாடி, எதிர்வரும் ஈத் பண்டிகையை முன்னிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்."

மேற்கு ஆசியாவில் மாறிவரும் சூழல் குறித்து நாங்கள் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டோம். அண்மையில் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்த எங்கள் கவலைகளையும் பகிர்ந்துகொண்டோம். குவைத்தின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் மீதான தாக்குதல்களை இந்தியா கண்டிப்பதாக மீண்டும் வலியுறுத்தினோம். ஹார்முஸ் நீரிணை வழியாகப் பாதுகாப்பான மற்றும் தடையற்ற கடல்வழிப் போக்குவரத்தை உறுதி செய்வதே எங்களின் முதன்மையான முன்னுரிமையாகத் தொடர்கிறது.

பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு, தொடர் ராஜ்ய ரீதியிலான உறவு இன்றியமையாதது என்பதில் நாங்கள் ஒருமித்த கருத்து கொண்டிருந்தோம்.

குவைத்தில் வசிக்கும் இந்தியச் சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்காக அவர் தொடர்ந்து அளித்துவரும் ஆதரவிற்கு அவருக்கு நன்றி தெரிவித்தேன்.  

***

(Release ID: 2241990)

TV/IR/RJ


(रिलीज़ आईडी: 2263191) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam