மத்திய அமைச்சரவை
பாரத் ஆதியோகி மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் தொழில்துறை வளர்ச்சிக்கான நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
18 MAR 2026 4:05PM by PIB Chennai
தொழில்துறை வளர்ச்சியை விரைவுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 100 தொழில் பூங்காக்களை மேம்படுத்தும் நோக்கிலான 33,660 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் கூடிய பாரத் ஆதி யோகி மேம்பாட்டுத் திட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தத் திட்டம் உலகத்தரத்திலான தொழில்துறை உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி உற்பத்தித் திறனை அதிகரிக்கச் செய்வதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய தொழில் துறை வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், உருவாக்கப்பட்டுள்ள தொழில்துறை நகரங்களின் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொழில்துறை சார்ந்த அடித்தளம் அமைப்பதற்கு உதவிடும்.
வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் வகையில், அதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் பாவ்யா திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. இதற்கென மாநில அரசுகளின் தலைமையில் நெறிப்படுத்தப்பட்ட ஒப்புதல் நடைமுறைகள் திறன்வாய்ந்த ஒற்றைச் சாளர அமைப்புகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு உகந்த சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2241785®=3&lang=2
-----
TV/SV/KPG/
(வெளியீட்டு அடையாள எண்: 2263184)
வருகையாளர் எண்ணிக்கை : 40
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam