வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
உலகளாவிய நிச்சயமற்ற நிலையை நிலையான வளர்ச்சிக்கான வாய்ப்புகளாக மாற்றுமாறு மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் அழைப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAY 2026 2:28PM by PIB Chennai
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று (19.05.2026) புதுதில்லியில் நடைபெற்ற வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் இந்திய வர்த்தகச் சீர்திருத்த உச்சி மாநாடு 2026-ல் உரையாற்றி, வர்த்தகம் செய்வதற்கான எளிமையை முன்னேற்றவும், இந்தியாவின் போட்டித்திறனை மேம்படுத்தவும், நாட்டின் பயணத்தை வளர்ச்சியை நோக்கி வேகப்படுத்தவும் தொழில்துறை மற்றும் அரசுக்கு இடையிலான ஆழமான ஒத்துழைப்பை வலியுறுத்தினார்.
தற்போதைய உலகளாவிய நிலைமை மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலையை, இந்தியா தனது வர்த்தக செயல்முறைகளை வலுப்படுத்தவும், விரைவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், அதிக நிலைத்தன்மையை உருவாக்கவும், விநியோகச் சங்கிலிகளை பலப்படுத்தவும் ஒரு வாய்ப்பாகக் காண வேண்டும் என்று அமைச்சர் கூறினார். தற்போதைய உலகளாவிய அபாயங்களை நாடு வளர்ச்சி மற்றும் சீர்திருத்தத்திற்கான வாய்ப்புகளாக மாற்றும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
மாறிவரும் உலகளாவிய நிலைமை மற்றும் மேற்கு ஆசிய நெருக்கடி குறித்து பேசிய திரு கோயல், வர்த்தக நிறுவனங்கள் பதற்றமடையாமல் வாய்ப்புகளையும் அபாயங்களையும் கவனமாக அணுக வேண்டும் என்றார். பெருந்தொற்று போன்ற கணிக்க முடியாத சவால்களை இந்தியா வெற்றிகரமாக சமாளித்ததாகக் கூறிய அவர், கழிவுகளை குறைப்பது, உற்பத்தித் திறனை மேம்படுத்துவது உள்ளிட்ட நடைமுறைகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.
பெருந்தொற்று காலகட்டத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள், டிஜிட்டல் ஈடுபாடு மற்றும் தொலைநிலை பணிமுறை மாதிரிகளின் செயல்திறனை நிரூபித்ததாக அவர் கூறினார். இந்தியாவில் உலகளாவிய திறன் மையங்கள் வேகமாக வளர்ந்து வருவதை குறிப்பிட்ட திரு கோயல், நாட்டில் சுமார் 1,800 திறன் மையங்கள் செயல்பட்டு வருவதாகவும், அவை நேரடியாக சுமார் 20 லட்சம் வேலைவாய்ப்புகளையும் மறைமுகமாக சுமார் 1 கோடி வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி வருவதாகவும் தெரிவித்தார். உலகளாவிய செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கக்கூடிய இளமையும் திறமையும் கொண்ட மனிதவளத்துடன் இந்தியாவை ஒரு நம்பகமான கூட்டாளியாக சர்வதேச நிறுவனங்கள் அதிக அளவில் அங்கீகரித்து வருகின்றன என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் சேவைத் துறையில் நம்பிக்கை இருப்பதாக தெரிவித்த அமைச்சர், செயற்கை நுண்ணறிவு மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற தொழில்நுட்பங்கள் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262734®=3&lang=1
***
SS/PKV/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2262885)
வருகையாளர் எண்ணிக்கை : 10