பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சுவீடன் நாட்டின் உயரிய விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது!

இடுகை இடப்பட்ட நாள்: 17 MAY 2026 11:13PM by PIB Chennai

சுவீடன் நாட்டின் கோதன்பர்க் நகரில் நடைபெற்ற  விழாவில், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் மிக உயரிய மற்றும் பழமையான விருதுகளில் ஒன்றான 'ராயல் ஆர்டர் ஆஃப் தி போலார் ஸ்டார், டிகிரி கமாண்டர் கிராண்ட் கிராஸ்' என்ற விருது வழங்கப்பட்டது. சுவீடனின் பட்டத்து இளவரசி விக்டோரியா இந்த விருதை பிரதமருக்கு வழங்கி கௌரவித்தார்.

 

18-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட இந்த விருது, பிற நாட்டு தலைவர்களின் சிறந்த பொதுச்சேவைக்காகவும், சுவீடன் நாட்டுடனான உறவை வலுப்படுத்துவதில் அவர்கள் ஆற்றிய பங்களிப்பிற்காகவும் வழங்கப்படும் மிக உயரிய கௌரவமாகும். இந்த விருதைப் பெறும் முதல் ஆசியத் தலைவர் பிரதமர் திரு நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

 

விருதைப் பெற்றுக் கொண்ட பிரதமர் திரு மோடி, இளவரசி விக்டோரியாவுக்கும் சுவீடன் நாட்டு மக்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். மேலும், இந்த விருதை 140 கோடி இந்திய மக்களுக்கும், இந்தியா – சுவீடன் நாடுகளுக்கு இடையேயான நீண்ட கால நட்புக்கும் அர்ப்பணிப்பதாகக் கூறினார். இந்த கௌரவம் இரு நாடுகளுக்கு இடையே உள்ள வரலாற்று மற்றும் கலாச்சாரப் பிணைப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும், இரு நாட்டு மக்களிடையே இருக்கும் அன்பிற்கு சான்றாகவும் அமைந்துள்ளது என்றும் பிரதமர் திரு மோடி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

 

இந்த விருது வழங்கப்பட்ட நிகழ்வானது, இந்தியா – சுவீடன் இடையிலான உத்திசார் கூட்டு செயல்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. மேலும், இது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதிலும், உலகளாவிய அமைதி மற்றும் செழுமைக்கு பங்களிப்பதிலும் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பரஸ்பர அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.

***

(Release ID: 2262091)

SS/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2262490) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada