ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஷீ-மார்ட்ஸ் மூலம் கிராமப்புற பெண்களுக்கு நாடு முழுவதும் சந்தை வாய்ப்புகள் - ஊரக வளர்ச்சி அமைச்சகம் புதிய திட்டம்

இடுகை இடப்பட்ட நாள்: 18 MAY 2026 4:09PM by PIB Chennai

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம்ஷீ-மார்ட்ஸ் (SHE-MARTs) எனப்படும் 'சுய உதவிக்குழு தொழில்முனைவோர் ஊரகப் பகுதிகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் சந்தைப்படுத்தல் முறையை உருவாக்குதல்தொடர்பான இரண்டு நாள் தேசிய ஆலோசனைக் கூட்டத்தை 2026 மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஒடிசாவின் புவனேஸ்வரில் நடத்தியது. 

மாநில திட்ட இயக்குநர்கள்மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டங்களின் மூத்த அதிகாரிகள்நபார்டு வங்கியின் பிரதிநிதிகள்துறை சார்ந்த வல்லுநர்கள்நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் போன்றோர் இதில் பங்கேற்றனர்.  அவர்கள்பெண்கள் தலைமையிலான ஊரகத் தொழில் நிறுவனங்களையும் சந்தை வாய்ப்புகளையும் வலுப்படுத்துவதற்கான உத்திசார் அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.

மாநிலங்கள்யூனியன் பிரதேசங்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள்பரிந்துரைகள் ஆகியவற்றைக் கொண்டுவழிகாட்டுதல்களை இறுதி செய்வதே இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தின் நோக்கமாக இருந்தது. நிறுவனக் கட்டமைப்புநிதி மாதிரிகள்ஒருங்கிணைப்பு வழிமுறைகள்கண்காணிப்பு அமைப்புகள்வணிகச் செயல்முறைகள்ஆளுகைக் கட்டமைப்புகள்தொழில்நுட்ப ஒருங்கிணைப்புசெயல்படுத்தும் உத்திகள் ஆகியவை முக்கியக் கருப்பொருள்களாக இருந்தன.

மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு டி.கே. அனில் குமார் காணொலிக் காட்சி வாயிலாகத் தொடக்கவுரை ஆற்றினார்.  மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் ஷீ-மார்ட்ஸ் வரைவுக் கட்டமைப்பை ஆராய்வதற்கும்செயல்படுத்துவதற்கான வழிகளைப் பரிந்துரைப்பதற்கும் ஒரு தளமாக இந்த தேசிய கலந்தாய்வு அமைந்தது என்று ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திருமதி சுவாதி ஷர்மா எடுத்துரைத்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262303&reg=3&lang=1

 

***

 

(Release ID : 2262303) 

SS/PLM/SH

 

(வெளியீட்டு அடையாள எண்: 2262463) வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati