பிரதமர் அலுவலகம்
உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
18 MAY 2026 1:45PM by PIB Chennai
உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ளார்.
உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000-மும் வழங்கப்படும் என திரு நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நிகழ்ந்த விபத்து குறித்து அறிந்து, மிகுந்த வேதனை அடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்.
உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்”
***
(Release ID : 2262212)
SS/PLM/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2262243)
வருகையாளர் எண்ணிக்கை : 9