உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் காந்திநகர் மாநகராட்சியின் ரூ. 620 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

இடுகை இடப்பட்ட நாள்: 17 MAY 2026 8:35PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா, குஜராத்தில் உள்ள காந்திநகர் மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் உரையாற்றிய திரு அமித் ஷா, காந்திநகரில் பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் தொடர்பான ரூ. 620 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் இன்று (17.05.2026) தொடங்கி வைக்கப்பட்டன என்று  கூறினார். காந்திநகரில் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும், பொது மக்களுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதற்கும் குஜராத் அரசும் மாநகராட்சியும் பல முக்கிய முன்முயற்சிகளை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.

 

பிரதமர் திரு நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில் தொடங்கிய குஜராத்தின் வளர்ச்சிப் பயணம், இன்றும் தடையின்றித் தொடர்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார். வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள இந்தத் தொடர்ச்சியே, சமீபத்திய உள்ளாட்சித் தேர்தல்களில் மக்கள் எங்கள் கட்சிக்கு அமோகமாக ஆதரவளித்ததற்குக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

மேற்கு வங்கத்தில் 50 ஆண்டுகளாக எந்தவொரு வளர்ச்சிப் பணியும் நடைபெறவில்லை என்று திரு அமித் ஷா கூறினார். ஒவ்வொரு கொள்முதலிலும், ஆளும் கட்சி தரகுப் பணம் பெற்று வந்தது. அப்போதைய ஆளும் கட்சி, இவ்வளவு பெரிய மாநிலத்தை இந்த நிலைக்குத் தள்ளியிருந்தது. சுதந்திரத்தின் போது, மேற்கு வங்கம் நாட்டின் பணக்கார மாநிலமாக இருந்தது என்று அவர் குறிப்பிட்டார். 50 ஆண்டுகால தவறான ஆட்சியால் சலிப்படைந்த மக்கள், தமது கட்சியை இரு கரம் நீட்டி ஆசீர்வதித்து, பிரதமர் திரு மோடி தலைமையில் அரசு  அமைத்ததாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262066&reg=3&lang=1

***

 

(Release ID: 2262066)

SS/BR/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2262150) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Gujarati