விவசாயத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐசிஏஆர் செலவின நிதிக் குழு தொடர்பான உயர் நிலைக் கூட்டம் - மத்திய வேளாண்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 16 MAY 2026 6:00PM by PIB Chennai

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமமான ஐசிஏஆர்-ன் (ICAR) செலவின நிதிக் குழு (EFC) தொடர்பான உயர்நிலைக் கூட்டம், மத்திய வேளாண்மை துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில், புது தில்லியில் அவரது அலுவலகத்தில் இன்று (16.05.2026) நடைபெற்றது.

 

கூட்டத்தின் போது, மத்திய அமைச்சர் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழும்மான ஐசிஏஆர்-ன் செயல்பாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், ஐசிஏஆர்-ன் தலைமை இயக்குநரும், வேளாண் ஆராய்ச்சி, கல்வித் துறையின் (DARE) செயலாளருமான டாக்டர் எம்.எல். ஜாட் கலந்து கொண்டு, நாடு முழுவதும் ஐசிஏஆர் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து மத்திய அமைச்சருக்கு விரிவாக விளக்கினார்.

 

 

கூட்டத்தின் பேசி அமைச்சர் மக்களுக்கு விவசாயமே முதன்மை வாழ்வாதாரமாக விளங்குகிறது என்றும், அது நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுவான அடித்தளத்தை வழங்குகிறது என்றும் கூறினார். விவசாயத்தை மேலும் அதிக உற்பத்தித்திறன் மிக்கதாகவும், குறைந்த செலவுடையதாகவும், லாபகரமான தொழிலாகவும் மாற்றுவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

ஐசிஏஆர்-ன் செயல் திட்டத்தில் தெரிவித்த மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான், இலக்குகளைக் குறித்த காலத்திற்கு முன்பே அடைவதற்காக அதிகாரிகள் அதிக ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261782&reg=3&lang=1

(Release ID : 2261782)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2261812) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी , Marathi , Gujarati , Kannada