பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஈராக் பிரதமராகப் பதவியேற்றுள்ள அலி ஃபாலிஹ் காதிம் அல்-ஜைதிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 16 MAY 2026 1:35PM by PIB Chennai

ஈராக் பிரதமராகப் பதவியேற்றுள்ள ஃபாலிஹ் காதிம் அல்-ஜைதிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஈராக்குடனான தனது நீண்டகால நட்புறவை இந்தியா பெரிதும் மதிக்கிறது என்றும், அனைத்துத் துறைகளிலும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"ஈராக் பிரதமராகப் பதவியேற்றுள்ள அலி ஃபாலிஹ் காதிம் அல்-ஜைதிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

ஈராக்குடனான தனது நீண்டகால நட்புறவை இந்தியா பெரிதும் மதிக்கிறது. அனைத்துத் துறைகளிலும் நமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது.

ஃபாலிஹ் காதிம் அல்-ஜைதிக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, நமது இரு நாடுகளின் கூட்டு முன்னேற்றம், செழிப்பு ஆகியவற்றுக்காக இணைந்து பணியாற்றுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்."

(Release ID: 2261692)

****

TV/PLM/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2261705) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Malayalam