கூட்டுறவு அமைச்சகம்
மீன்வள கூட்டுறவு சங்கங்களின் தேசிய அளவிலான பயிலரங்கம் ஐதராபாத்தில் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
15 MAY 2026 9:16PM by PIB Chennai
மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் கூட்டுறவு மூலம் வளம் என்ற தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்தும் நோக்கில், ஐதராபாத்தில் மீன்வள கூட்டுறவு சங்கங்களுக்கான தேசிய அளவிலான பயிலரங்கம் மே 15 அன்று நடைபெற்றது.
மத்திய கூட்டுறவுத்துறைச் செயலாளர் டாக்டர் ஆஷிஷ் குமார் பூதானி, மீன்வளத்துறைச் செயலாளர் டாக்டர் அபிலக்ஷ் லிகி ஆகியோர் இதில் கலந்துகொண்டு உரையாற்றினர். மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு மலிவான கடனுதவி, நவீன தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகளை வழங்கவும் கூட்டுறவு சங்கங்களை பலப்படுத்துவது அவசியம் என்று அவர்கள் வலியுறுத்தினர். மேலும், மீன்வளத் துறையில் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பது மற்றும் உலகளாவிய தரத்திற்கு ஏற்ப இத்துறையை மாற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இப்பயிலரங்கில் புதிய மீன்வள கூட்டுறவு சங்கங்களை உருவாக்குதல், 'பிரதமரின் மீன்வள விவசாயிகள் வளம் மற்றும் கூட்டுறவுத் திட்டத்தின் கீழ் சங்கங்களை மேம்படுத்துதல், மற்றும் 2026-27 நிதியாண்டிற்கான இலக்குகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம்,தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் போன்ற பல்வேறு தேசிய அமைப்புகளின் பிரதிநிதிகளும், பல மாநில அதிகாரிகளும் இதில் பங்கேற்றுத் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261643®=3&lang=2
செய்தி அடையாள எண்: 2261643
***
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2261694)
आगंतुक पटल : 44