ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராஜஸ்தானில் ரூ.400 கோடி ரயில்வே திட்டங்கள்: 15 உலகத்தரம் வாய்ந்த நிலையங்கள் அர்ப்பணிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 15 MAY 2026 6:00PM by PIB Chennai

மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், பூபேந்தர் யாதவ் மற்றும் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா ஆகியோர் ராஜஸ்தானில் 400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டி, அவற்றை நாட்டிற்கு அர்ப்பணித்தனர். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ஜெய்சல்மர், பார்மர், பூந்தி உட்பட 15 மறுசீரமைக்கப்பட்ட ரயில்வே நிலையங்கள் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தன.

 

அல்வார் ரயில் நிலையத்தை 112 கோடி ரூபாயில் மேம்படுத்தும் பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அம்மாநிலத்தில் தற்போது 85 நிலையங்களில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். கடந்த காலங்களில் 682 கோடி ரூபாயாக இருந்த ராஜஸ்தான் ரயில்வே பட்ஜெட், தற்போது 10,228 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் 5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுவதுடன், கடந்த 10 ஆண்டுகளில் 3,900 கி.மீ தூரத்திற்குப் புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானின் கட்டிடக்கலை மரபுடன், நவீன மின்தூக்கிகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களுடன் இந்த நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் மாநிலத்தின் தொழில் மற்றும் சுற்றுலா வளர்ச்சியைப் பெருமளவு ஊக்குவிக்கும் என அமைச்சர்கள் பெருமிதம் தெரிவித்தனர்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261502&reg=3&lang=1

செய்தி அடையாள எண்: 2261502

****

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2261654) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada