புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
நாட்டில் 2026 ஏப்ரல் மாத வேலைவாய்ப்பு நிலவரம்
இடுகை இடப்பட்ட நாள்:
15 MAY 2026 4:00PM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், 2026 ஏப்ரல் மாதத்திற்கான நாட்டின் வேலைவாய்ப்பு நிலவரம் குறித்த முக்கியப் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாட்டின் ஒட்டுமொத்தத் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் மார்ச் மாதம் இருந்த 55.4 சதவீதத்திலிருந்து ஏப்ரலில் 55 சதவீதமாகச் சற்றே குறைந்துள்ளது. இதில் பெண்களின் பங்களிப்பு 33.9 சதவீதமாக உள்ளது. பணியாளர்களின் விகிதம் 52.2 சதவீதமாகக் கணக்கிடப்பட்டுள்ளது; இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 52.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 5.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் இது 5.1 சதவீதமாக இருந்தது. நகர்ப்புறங்களில் வேலையின்மை விகிதம் 6.6 சதவீதமாகக் குறைந்திருந்தாலும், கிராமப்புறங்களில் 4.3 சதவீதத்திலிருந்து 4.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. பெண்களுக்கான வேலையின்மை விகிதம் 5.4 சதவீதமாக உள்ளது; இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட அதிகமாகும். குறிப்பாக, நகர்ப்புறப் பெண்களின் வேலையின்மை விகிதம் 8.5 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, கடந்த ஆண்டை விட வேலைவாய்ப்புச் சந்தையில் சிறிய அளவிலான சரிவு ஏற்பட்டுள்ளதை இப்புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261386®=3&lang=1
செய்தி அடையாள எண்: 2261386
****
TV/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2261604)
வருகையாளர் எண்ணிக்கை : 10