கலாசாரத்துறை அமைச்சகம்
பகவான் புத்தரின் புனிதப் பொருட்களின் கண்காட்சி லே-யில் நிறைவடைந்தது
இடுகை இடப்பட்ட நாள்:
14 MAY 2026 8:40PM by PIB Chennai
லடாக்கில் நடைபெற்ற புத்தரின் புனிதப் பொருட்களின் கண்காட்சி இன்று நிறைவடைந்தது. லேயின் சோகலாம்சாரில் உள்ள தர்ம மையத்தில், 14 நாட்கள் நடந்த மாபெரும் கண்காட்சியின் நிறைவு விழாவில், லடாக் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா கலந்துகொண்டார்.
ஒட்டுமொத்தமாக, இந்த புனிதக் கண்காட்சிக்கு லடாக்கிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளில் உள்ள பக்தர்களிடமிருந்தும் அமோகமான வரவேற்பு கிடைத்தது. பதினான்கு நாட்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியின் போது 1,18,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனிதப் பொருட்களுக்கு மரியாதை செலுத்தினர்.
விழாவில் பேசிய துணைநிலை ஆளுநர் திரு சக்சேனா, இந்தக் கண்காட்சி ஒரு ஆழ்ந்த ஆன்மீக நிகழ்வு மட்டுமின்றி, கலாச்சார ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் சின்னமுமாக திகழ்ந்தது என்று கூறினார். இந்தக் கண்காட்சி மூலம் லடாக் பூமி புத்த பகவானாலேயே ஆசீர்வதிக்கப்பட்டதாகத் தோன்றுவதாகவும், கண்காட்சியின் போது உருவான ஆன்மீக ஆற்றல் மக்களுடன் என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2261214®=3&lang=2
(Release ID: 2261214)
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2261261)
வருகையாளர் எண்ணிக்கை : 6