வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
போலிப் பணியாளர் சேர்க்கை குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்: மத்திய அரசு
இடுகை இடப்பட்ட நாள்:
14 MAY 2026 3:54PM by PIB Chennai
ஜெஜி பில்டிங் குரூப் என்ற பெயரில் செயல்பட்டு வரும் நிறுவனம், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்துடன் தங்களுக்குத் தொடர்பு உள்ளதாகப் பொய்யாக தகவல் கூறி, போலியாக பணியாளர் சேர்க்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
இந்நிறுவனம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரைப் பயன்படுத்தி போலியாக காலிப் பணியிட அறிவிப்புகளை வெளியிடுதல். அமைச்சகத்தின் அங்கீகாரம் அல்லது ஒருங்கிணைப்பு தங்களுக்கு இருப்பதாகக் கூறி, விண்ணப்பதாரர்களைத் தவறாக வழிநடத்துதல், வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி, விண்ணப்பதாரர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக அந்நிறுவனம் ஒரு இணையதளத்தை இயக்கி வருகிறது.
இதையடுத்து, அரசு சில விளக்கங்களை அளித்துள்ளது.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் எந்தவொரு பணியாளர் சேர்க்கை அறிவிப்பையும் வெளியிடவில்லை.
அமைச்சகத்தின் சார்பாக பணியாளர் சேர்க்கை பணிகளை மேற்கொள்ள, எந்தவொரு தனியார் முகமைக்கோ அல்லது நிறுவனத்திற்கோ அமைச்சகம் அதிகாரம் அளிக்கவில்லை.
இதற்கு மாறாக தெரிவிக்கப்படும் எந்தவொரு தகவல்தொடர்பும் மோசடியானதாகவும், தவறாக வழிநடத்துவதாகவும் கருத வேண்டும்.
பொதுமக்கள், குறிப்பாக வேலைத் தேடுவோர், பின்வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்:
போலி பணியாளர் சேர்க்கை அறிவிப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம்.
அந்த நிறுவனங்களுடன் தனிப்பட்ட அல்லது நிதி சார்ந்த தகவல்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
சலுகைகள் தொடர்பாக எவ்விதப் பணப் பரிமாற்றங்களையும் மேற்கொள்ள வேண்டாம்.
பணியாளர் சேர்க்கை குறித்த சம்பவங்களை தேசிய இணையக் குற்றப் புகாரளிக்கும் இணையதளத்தில் அல்லது உள்ளூர் காவல்துறையினரிடம் புகார் அளிக்கவும்.
பொதுமக்கள் நலன்கருதி, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், ஏதும் அறியாத குடிமக்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதற்கும் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
(Release ID: 2260999)
****
SS/IR/RJ/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2261175)
வருகையாளர் எண்ணிக்கை : 12